
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மத்திகிரி பகுதியில் உள்ள பாத்திமா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த விழா மாணவர்கள், ஆசிரியர்கள், மாவட்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. விழா முழுவதும் மகிழ்ச்சியால் பள்ளி வளாகம் நிறைந்திருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் உண்மையான அர்த்தமான அன்பு, அமைதி மற்றும் மனிதநேயம் போன்றவை நிகழ்ச்சியின் முக்கியக் கருத்தாக இருந்தன.
சிறப்பு விருந்தினர்களாக துணை செயலாளர் பாஷா மற்றும் TVK கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட இணைப்பாளர் ர.அன்வர் பாஷா, மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்களால் கராத்தே, பாரத நாட்டியம், குழு நடனம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகள் பெரும் பாராட்டைப் பெற்றன, மேலும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
பழக்கமான நலதிட்டங்கள் மற்றும் சமூக மதிப்புகளையும் எடுத்துரைக்கும் வகையில், விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இது மாணவர்களுக்கு மேலும் உற்சாகத்தைப் பெற்றுத்தந்தது. பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும், இந்த விழாவை வெற்றிகரமாக நடத்துவதில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் ஆன்மீகமும், சமூக மதிப்புகளையும் எடுத்துரைக்கும் இந்த நிகழ்வு, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாகவும் அமைந்துள்ளது. மத்திகிரி பாத்திமா பள்ளியில் நடைபெற்ற இந்த கிறிஸ்துமஸ் விழா, மாணவர்களின் நினைவில் நீண்ட நாள் நிலைக்கும் ஒரு சிறப்பான நாளாக அமைந்தது.
2026 – அனைத்து மாணவர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
தமிழக வெற்றிக் கழகம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்