கிருஷ்ணகிரி மாவட்டம் – பாறைகளும், மலைகளும், பசுமையான வயல்களும் சூழ்ந்த இந்த மாவட்டத்தில் இன்று ஒரு மௌன அபாயம் மனித உயிர்களை மெல்ல காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. அது பாம்பு கடி.

கடந்த சில வாரங்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்சட்டி, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, ஓசூர் போன்ற பகுதிகளில் பாம்பு கடி சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
விவசாயப் பணிகளிலும், கூலி வேலைகளிலும்
விவசாய நிலங்களில் மரண பயம்
அதிகாலை நேரங்களில் வயலுக்குச் செல்லும் விவசாயிகள், பாசன கால்வாய்கள், புதர் நிறைந்த நிலங்கள் வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
காலணிகள் இன்றி வேலை செய்வதால் பாம்பு கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
“ஒரு நிமிடம் தாமதமானாலும் உயிர் போகும்” என்ற அச்சத்தில்,
விவசாயிகள் வாழ வேண்டிய சூழல் இன்று உருவாகியுள்ளது.
வீட்டுக்குள் புகும் விஷம்
மழைக்காலம் மற்றும் குளிர் அதிகரிக்கும் போது. பாம்புகள் வெப்பம் தேடி வீடுகளுக்குள் புருகின்றன. கிராமப்புரங்களில் மண்வீடுகள், திறந்த கதவுகள், எலி தொல்லை ஆகியவை பாம்புகளுக்கு சாதகமான சூழலாக மாறியுள்ளது
மருத்துவமனை- நேரமே உயிர்
மருத்துவர்களின் ஒரே குரல்: “பாப்பு கடித்தவுடன் நேரத்தை விணாக்காதீர்கள்” மந்திரம், வசதி நாட்டுவைத்தியம், மூலிகை போன்ற பழைய நம்பிக்கைகள் இன்னும் சில கிராமங்களில் உயிரிழப்புக்கு காரணமாகி வனறன. அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் எதிர் விஷ மருந்து (Anti-venom) நான் ஒரே தீர்வு.
அறியாமையே பெரிய ஆபத்து
பாம்பு விஷம் உடலில் பரவத் தொடங்கும் நேரத்தில்,
கட்டுப் போடுதல், வெட்டுதல், சுண்ணாம்பு அல்லது மஞ்சள் தடவுதல் போன்ற தவறான முறைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.
இத்தகைய செயல்கள் பாதிக்கப்பட்டவரின் நிலையை மேலும் மோசமாக்குகின்றன.
தீர்வு என்ன?
கிராமம் தோறும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
24 மணி நேர அவசர மருத்துவ சேவைகள் அனைத்துக் கிராமங்களிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.
பாம்பு கடி அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு பாதுகாப்பு காலணிகள் வழங்கப்பட வேண்டும்.
சுகாதாரத்துறை மற்றும் வனத்துறை இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.மரணம், கிருஷ்ணகிரியில் இனி ஒரு உயிரும் வீணாகக் கூடாது என்பதே இந்த முகப்பு ஸ்டோரியின் குரல்.