RNI No: KNBIL/25/A2270

நடிகர் சியான் விக்ரம்

நடிகர் சியான் விக்ரம்

இயற்பெயர் :கென்னடி ஜான் விக்டர்.

ஒரு இந்திய திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவர். இவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் தனது ப ன மு க த த றமை மறறும கதாபாத்திரங் களுகிகாக தனினை மாற்றிக்கொள்ளும் அர்ப்பனிப்புடன் அறியப்படுகிறார்

பயங்கரமான விபத்து:

கல்லூரி படிக்கும் போது ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி, அவரது கால் துண்டிக்கப்படும் அபாயத்தில் இருந்தார். மூன்று ஆண்டுகள் படுகையில் இருந்த இவர், 23 அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு மீண்டும் நடக்கக் கூடிய திறனை பெற்றார். இந்த கடினமான காலத்தில் தான் அவர் தனது மனைவி ஷைலஜாவை சந்தித்தார்.


திரைத்துரைப் பயணம்:

பத்து ஆண்டுகளுக்கு மேல் போராட்டம் செய்த பிறகும், 1990-இல் அறிமுகமான அவர், 90களில் பல சிறிய வேடங்களிலும் தோல்விகளிலும் மட்டுமே சந்தித்தார். வருமானம் சம்பாதிக்க பிரபுதேவா மற்றும் அஜித் குமார் போன்ற நடிப்பாளர்களுக்காககுரல் கொடுப்பாளராகவும் பணியாற்றினார்.


திருப்பு முனை:

1999 ஆம் ஆண்டில் பாலா இயகிய ‘சேது’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அவரை தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக நிலைநிறுத்தியதுடன், ‘சியான்’ என்ற பெயரையம் பெற்றுத்தந்தது.


சமூக ஈடுபாடு:

நடிப்பு தவிர, விக்ரம் பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். ஏழைகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சைகள் வழங்கும் காசி கண் பராமரிப்பு அறக்கட்டளை மற்றும் அவரது சொந்த விக்ரம் அறக்கட்டளை மூலம் உதவிகளைச் செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *