RNI No: KNBIL/25/A2270

மாடர்ன் கிளாமரின் முகம் மாளவிகா மோகனன்

மாடர்ன் கிளாமரின் முகம் மாளவிகா மோகனன்

தமிழ் சினிமாவில் சமீப காலமாக

அதிகம் பேசப்படும்

நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் மாளவிகா மோகனன். அழகும் தைரியமும் கலந்த அவரது தோற்றம், ரசிகர்களை மட்டுமல்ல சமூக ஊடகங்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறது. பாரம்பரியமும் மாடர்னும் கலந்த அவரது ஸ்டைல், கோலிவுட்டில் அவரை தனித்துவமான

கிளாமர் ஐகானாக மாற்றியுள்ளது.

‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற மாளவிகா, அதன் பிறகு தனது ஃபேஷன் சென்ஸ் மற்றும் தைரியமான அணுகுமுறையால் இளம் * ரசிகர்களின் ஆதரவை பெற்றார். பொது நிகழ்ச்சிகள், மேகசின் கவர்ஷூட், சமூக ஊடகப் பதிவுகள் என ஒவ்வொரு தோற்றமும் ஹாட் டாபிக்காக மாறுகிறது. கிளாமரால் தனித்துவமான அவர் அடையாளம் பெற்றுள்ளார்.

கிளாமர் குறித்து வரும் விமர்சனங்களுக்கு மாளவிகா எப்போதும் நேர்மையாகவும் தைரியமாகவும் பதிலளிக்கிறார்.’ஒரு நடிகையின் உடை அவளது தேர்வு’ என்ற அவரது நிலைப்பாடு பல இளம் பெண்களுக்கு ஊக்கமாக உள்ளது. இன்றைய கோலிவுட்டில்,

மாளவிகா மோகனன் ஒரு நடிகையாக

மட்டுமல்ல, மாடர்ன் ஸ்டைல் ஐகான் மற்றும் கிளாமர் சின்னம் என்ற பெயருடன் ஜொலித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *